NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

21 வருடங்களின் பின்னர் தங்கம் வென்ற தருஷி கருணாரத்ன – குவியும் பாராட்டுக்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 வருடங்களின் பின்னர் எமது நாட்டிற்காக தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்த 18 வயதான தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (05) சபையில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அத்துடன், இவரை இந்த துறைக்கு கொண்டு வந்த பாடசாலைக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற அனைவருக்கும் தானும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அன்பான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles