NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

24 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் பெண் பிரதமர்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்த பின்னர், அமைந்த உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி பிரமாணம் செய்துள்ளார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் இரு பெண்கள் மாத்திரமே பிரதமர் பதவியை வகித்துள்ளனர்.

1960 ஜுலை 21ஆம் திகதி முதல் 1965 மார்ச் 25ஆம் திகதிவரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமர் பதவியை வகித்துள்ளார். உலகில் முதல் பெண் பிரதமர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறகு 1970 முதல் 77 வரையும் அவர் பிரதமராக பதவி வகித்தார்.

அதன்பின்னர் 1994 ஆகஸ்ட் 19ஆம் திகதி முதல் 1994 செப்டம்பர் 12ஆம் திகதிவரை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமராக பதவி வகித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்றதும் தனது தயாரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை, சந்திரிக்கா பிரதமராக்கினார். 1994 நவம்பர் 14ஆம் திகதி முதல் 2000 ஆகஸ்ட் 9ஆம் திகதிவரை அவர் பிரதமராக செயற்பட்டார்.

2000 ம் ஆண்டுக்கு பின்னர் ரத்னசிறி விக்ரமநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, திமு ஜயரத்ன மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பிரதமர் பதவியை வகித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 2 தசாப்தங்களுக்கு பிறகு இலங்கையில் பெண்ணொருவர் பிரதமராக பதவியேற்கின்றார்.

கூடியவிரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு டிசம்பர் மாதத்துக்குள் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles