NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

300க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ.க. கூட்டணி முன்னிலை!

இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று (04) காலை 08 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் தற்போதைய நிலைவரப்படி பா.ஜ.க. கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.

பெரும்பான்மைக்குத் தேவையான 272 தொகுதிகளைக் கடந்து 300 இற்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

இதேவேளை காங்கிரஸ் கூட்டணி 221 தொகுதிகளிலும், ஏனைய கட்சிகள் 22 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

இன்று பகல் 12.00 மணியளவில் கிட்டத்தட்ட எந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை என்பது தெரிந்துவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles