இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில்இ பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.
மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும்இ ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின.
இந்நிலையில்இ மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா எதிர்வரும் 8ஆம் திகதி மாலை நடைபெற உள்ளது.
முன்னதாகஇ பா.ஜ.க. தலைமையில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியினர் இன்று மாலை ஜனாதிபதி திரளபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளனர். அதன்பின்இ எதிர்வரும்8ஆம் திகதி மாலை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.