IPL கிரிக்கெட் தொடரில் இன்று (16) கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற 65வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் RR அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது.
இந்த போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.அதன்படி , ராஜஸ்தான் அணிமுதலில் துடுப்பாட்ட தீர்மானித்து.
அதன்படி தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , டாம் கோலர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 4 ஓட்டங்களிலும் , டாம் கோலர் 18 ஓட்டங்களிலும் , பின்னர் வந்த சாம்சன் 18 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து ரியான் பராக் , அஸ்வின் இருவரும் சிறப்பாக ஆடினர். நிலைத்து ஆடி ஓட்டங்களை குவித்தனர். அஸ்வின் 19 பந்துகளில் 28 ஓட்டங்களும் , பராக் 34 பந்துகளில் 48 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் 144 ஓட்டங்களை எடுத்தது. பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரன், ராகுல் சாஹர், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.