சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் இருந்து சிகரெட், உழுந்து மா மற்றும் மஞ்சள் துண்டுகள் என்பன நேற்று (26) ஒருகொடவத்தை சுங்க முனையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிகரட் தொகையின் பெறுமதி 757 மில்லியன் ரூபா எனவும், உழுந்து மாவின் பெறுமதி 23 மில்லியன் ரூபா எனவும், மஞ்சள் தொகையின் பெறுமதி 14 மில்லியன் ரூபா எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
இந்த பொருட்கள் நாட்டிற்குள் பிரவேசித்திருந்தால் அரசாங்கத்திற்கு 660 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.