NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிராண்ட்சிலாம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் Updates!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

உலக தரவரிசையில் 22 ஆவது இடத்தில் இருப்பவரான அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 4-வது சுற்று ஆட்டத்தில் பல்கேரியாவை சேர்ந்த 28ஆம் நிலை வீரரான டிமிட்ரோவை எதிர் கொண்டார்.

இதில் சுவரேவ் 6-1இ 6-4 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் எட்செவரியுடன் போட்டியிடவுள்ளார்.

எட்செவரி 4ஆவது சுற்றில் 27ஆவது வரிசையில் உள்ள நிஷிகோவை (ஜப்பான்) 7-6 (10-8), 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார்.

23 வயதான அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறி உள்ளார். மற்ற 4ஆவது சுற்று ஆட்டங்களில் 4ஆம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே), 6-வது வரிசையில் உள்ள ஹோல்கர் ருனே (டென்மார்க்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒன்ஸ் ஜபீர் (துனிசியா) ஹாதத்மையா (பிரேசில்) ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழைந்தனர்.

Share:

Related Articles