NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்க நூல்களால் வடிவமைக்கப்பட்ட திருமண புடவை – மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?

சுரங்க தொழிலதிபர் மற்றும் கர்நாடக முன்னாள் அமைச்சருமான ஜி.ஜனார்த்தன ரெட்டியின் மகளான பிராமணி ரெட்டிக்கும் ஐதரபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விக்ரம் தேவ ரெட்டியின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நவம்பர் 6,2016இல் திருமணம் நடந்தது.

அதுவும் ஒருநாள் திருமணம் அல்ல, ஐந்து நாட்கள் திருமணம் நடந்தது. 50,000 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த திருமணத்தில் 500 கோடிக்கும் அதிகமாக பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.

மணமகள் பிராமணி, தங்க நூல்களால் வடிவமைக்கப்பட்ட சிவப்பு நிறத்திலான அழகான காஞ்சிபுரம் புடவை அணிந்திருந்தார். இந்த புடவையின் விலை 17 கோடி ரூபாய்.

அவர் அணிந்திருந்த நெக்லஸின் விலை ரூபாய் 25 கோடி.

மொத்தமாக மணப்பெண்ணின் நகைகள் ரூபாய் 90 கோடி மதிப்புடையவை. மேக்கப் செலவு மட்டும் 30 இலட்சம் ரூபாய்.

திருமண அழைப்பிதழ்களுக்கான செலவு மட்டும் ரூபாய் 5 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles