NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Asia Cup 2023: இன்று வெல்லப்போவது யார்?

16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமானது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ் ஆகிய 4 நாடுகள் சுப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தன. 

சுப்பர் 4 சுற்று முடிவில் இந்தியா (2 வெற்றி, ஒரு தோல்வி), இலங்கை (2 வெற்றி, ஒரு தோல்வி) தலா 4 புள்ளிகள் பெற்றன. 

ரன்-ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. 

இந்தியா-இலங்கை மோதல் 

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தானுடன் மோதிய போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 

2-வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை விரட்டியடித்தது. சுப்பர் 4 சுற்றில் 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையையும் அடுத்தடுத்து வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

கடைசி போட்டியில் 6 ஓட்டம் வித்தியாசத்தில் பங்காளதேஷிடம் வீழ்ந்தது. அந்த போட்டியில் இந்திய அணியில் விராட்கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது தோல்விக்கு ஒரு காரணமாகும்.

Share:

Related Articles