NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

CEB மறுசீரமைப்பு செயல்முறை: வீதி வரைப்படம் – காலக்கெடுவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் முன்மொழியப்பட்ட வீதி வரைப்படம் மற்றும் காலக்கெடுவுக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதன்படி, புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

சீர்திருத்த செயலகத்தை நிறுவுவதற்கும், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, USAID மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) போன்ற மேம்பாட்டு நிறுவனங்களின் உதவியைப் பெறவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles