NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Cordelia Cruises கப்பல் 3 மாதங்களில் 9ஆவது முறையாக இலங்கையை வந்தடைந்துள்ளது!

Cordelia Cruises எனும் சுற்றுலா பயணக் கப்பல் கடந்த மூன்று மாதங்களில் ஒன்பதாவது முறையாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.

இதன் ஊடாக 6,478 சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கப்பல் சேவை இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடமாகாண சுற்றுலா சபையின் அதிகாரிகள் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்று யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவுகளை வழங்கியதுடன், சில விசேட நிகழ்வுகளும் அண்மையில் யாழ்.தெலிப்பளை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மற்றும் வடமாகாண சுற்றுலா சபை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Share:

Related Articles