G-20 அமைப்பின் 18ஆவது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (09) கோலாகலமாக தொடங்குகிறது.
இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்துள்ள தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
G-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இந்தியாவில் G-20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை என்பதோடு இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கின்றமைக் குறிப்பிடத்தக்கது