NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ICC ஆடவர் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் பும்ராவுக்கு முதலிடம்!

ICC ஆடவர் டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான அண்மைய தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதன் மூலம் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ராவின் இடம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்துடன் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பும்ரா இரு இன்னிங்ஸுகளிலும் மொத்மாக 91 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இந்த அபாரமான பந்து வீச்சு மூலம் பும்ரா அண்மைய ஐசிசி ஆடவர் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் ஒட்டுமொத்தமாக மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்துக்கு வந்தார்.

அதுமட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றார்.

இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவர் தெரிவானார்.

Share:

Related Articles