NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ILT20 தொடர் ஆரம்பமாகும் திகதி தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு !

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ILT20 கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகும் திகதி தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி ILT20 தொடர் ஆரம்பமாகும் என்பதுடன் பெப்ரவரி 18ஆம் திகதி நிறைவுக்குவரும் என தொடரின் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.

ILT20 தொடரின் முதல் பருவகால போட்டிகள் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற SAT20 தொடர் நடந்த ஒரே காலப்பகுதியில் நடைபெற்றிருந்தன. எனினும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இரண்டாவது பருவகாலத்தின் திகதிகளில் சிறிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. SAT20 தொடர் ஜனவரி 10ஆம் திகதி முதல் பெப்ரவரி 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், ILT20 தொடர் ஜனவரி 19ஆம் திகதி ஆரம்பித்து பெப்ரவரி 18ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

தொடரை பொருத்தவரை கடந்த ஆண்டு போன்று இம்முறையும் MI எமிரேட்ஸ், டுபாய் கெபிட்டல்ஸ், டெசர்ட் வைபர்ஸ், கல்ப் ஜயண்ட்ஸ், அபு தாபி நைட் ரைடர்ஸ் மற்றும் சார்ஜா வொரியர்ஸ் போன்ற 6 அணிகள் மோதவுள்ளன.

குறித்த இந்த தொடரில் விளையாடுவதற்கு இலங்கை அணியைச் சேர்ந்த 12 வீரர்கள் இதுவரையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி தசுன் ஷானக, சதீர சமரவிக்ரம, நுவான் துஷார, விஜயகாந்த் வியாஸ்காந்த், குசல் பெரேரா, டில்சான் மதுசங்க, குசல் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், வனிந்து ஹஸரங்க மற்றும் மதீஷ பதிரண ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles