NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IMFஇன் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான பாராளுமன்ற விவாதத்துக்கான திகதி அறிவிப்பு!

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான விவாதத்தை ஏப்ரல் 25ஆம் திகதி முதல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமது நாட்டுக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பதை அரசியல் கட்சிகள் தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு அறிவிக்கும் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம், பொது நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles