NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுக்ரைனின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களைக் குறிவைக்கும் ரஷ்யா !

ரஷ்யா – யுக்ரைன் இடையேயான போர் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இருந்ததை விட தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில், யுக்ரைனில் உள்ள வணிக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

அந்த வகையில், ஒடேசா நகரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பழமையான தேவாலயமொன்று ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் விசனம் தெரிவித்துள்ளன.

குறித்த தாக்குதலில் தேவாலயத்தில் இருந்த இருவர் படுகாயமடைந்துள்ளதோடு தேவாலயத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை பணியாளர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ஏனைய நாடுகள் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles