அபுதாபியில் MERS-CoV என்ற மிகவும் ஆபத்தான தொற்றுவகையின் பாதிப்பு நேற்று (ஜூலை 24) பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இளைஞர் ஒருவருக்கு, Middle East Respiratory Syndrome – Coronavirus (MERS-CoV) என்ற கொடிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கொவிட்-19 தொற்றை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அந்த நபருடன் தொடர்பில் இருந்த 108 பேரின் பட்டியலை விரிவாக சரிபார்த்த போதிலும், WHO வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான எந்த தொடர்பையும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த வைரஸ் முக்கியமாக ஒட்டகம் போன்ற விலங்குகளிடம் இருந்து பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும், பாதிக்கப்பட்ட குறித்த நபர் ஒட்டகங்களுடன் தொடர்பு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.