அமெரிக்க நாட்டின் டெக்சாசை சேர்ந்தவர் 90 வயதுடைய மெல்பா மெபேன் மெல்பா 16 வயதாக இருந்தபோது தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அந்த நிறுவனத்தின் ஷாப்பிங் மாலில் லிப்ட் ஆபரேட்டர் பணிக்கு சென்றார்.
அதே நிறுவனத்தில் ஆடை மற்றும் அழகு சாதன பொருட்கள் பிரிவில் 74 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 90 வயதை கடந்த மெல்பா கடந்த 30ந்தேதி பணி நிறைவு பெற்றார்.
இதன்போது, நான் வீட்டில் இருந்ததை விட எனது நிறுவனத்தில் தான் அதிக நேரம் செலவழித்தேன். தற்போது வீட்டில் தனியாக இருப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.