NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Harry Potter வெளியீட்டாளர் படகு விபத்தில் பலி !

ஹாரி பாட்டர் புத்தக தொடரின் முன்னணி வெளியீட்டாளர் அட்ரியன் வாகன் தனது கணவர் மைக் மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் விடுமுறையை கொண்டாட இத்தாலி சென்றுள்ளனர்.

இத்தாலியில் நேபிள்ஸுக்கு அருகிலுள்ள சலேர்னோ மாகாணத்தில் உள்ள அமல்பி கடற்கரையில் அவர்கள் ஒரு சிறிய படகில் பயணம் செய்து கொண்டிருந்த போது அவர்களின் படகு 85 பேருடன் சென்ற சுற்றுலா கப்பல் ஒன்றின் மீது மோதியுள்ளது.

இதில் அட்ரியன் கடலில் விழுந்துள்ளதோடு படுகாயம் அடைந்த அவர், புளூம்பெர்க் அமெரிக்க ஜனாதிபதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் வாகனின் கணவரும் காயமடைந்துள்ளதோடு அவரது இரண்டு குழந்தைகள் காயமின்றி தப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

Share:

Related Articles