NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கெஹலிய ரம்புக்வெல்லவின் பெயர் நீக்கம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பெயரை அவரது பெயரில் உள்ள பாடசாலையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குண்டசாலையில் உள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலையின் பெயரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யுமாறு மத்திய மாகாண ஆளுநர் ளு.P.ளு.அபயகோனால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பாடசாலைக்கு குண்டசாலை றோயல் ஆரம்ப பாடசாலை என பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கட்டமைப்புக் குழுவினால் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் முன்வைத்த முன்மொழிவுகளை கருத்திற் கொண்டு திணைக்களத்தினால் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த பாடசாலை 1939 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர். டி பண்டாரநாயக்க கல்லூரி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, வந்ததுடன் பல்வேறு கல்விச் சீர்திருத்தங்களுக்கமைய, நாட்டறம்பொத வித்தியாலயம், குண்டசாலை மகா வித்தியாலயம் எனவும் அழைக்கப்பட்டுள்ளது.

இந்த, ஆரம்பப் பாடசாலை அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டு கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles