பாணந்துறையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
நேற்று (16) மாலை பண்டாரகம மற்றும் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், பாணந்துறை கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்த வேளையில், அங்கு நீராடிக்கொண்டிருந்த போது, ஏற்பட்ட பேரலையில் சிக்கி ஐந்து பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.
ஐவரில் மூவரை அப்போது பணியில் ஈடுபட்டிருந்த பாணந்துறை கடலோர கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காக்கும் குழுவினர் மீட்டுள்ளனர்.
பண்டாரகம, அட்டலுகம பகுதிகளை சேர்ந்த 15 வயது சிறுவனும் மற்றும் பாடசாலை செல்லும் சிறுவன் ஒருவருமே இவ்வாறு காணமல் போயியுள்ளதுடன் சடலங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.