இலங்கை வானொலி அறிவிப்பாளர்களைக் கௌரவிக்கும் வகையில் வருடாந்தம் இலங்கை வானொலி அரச விருதுகள் வழங்கும் விழா இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் எமது தமிழ் எப் எம் அறிமுகமாகிய முதலாவது ஆண்டிலேயே 4 தேசிய விருதுகளை தமக்கு சொந்தமாக்கிக் கொண்டது.
வானொலிக்கான சிறந்த நிலையக் குறியிசை விருது மற்றும் நிகழ்ச்சிக் குறியிசைக்கான விருதையும் தமிழ் எப் எம் இன் பணிப்பாளர் ஹோஷியா அனோஜன் பெற்றுக் கொண்டார்.
அதேவேளை வருடத்தின் சிறந்த செய்தி வாசிப்பாளராக கிரிஜா தியாகராஜா மற்றும் சிறந்த வானொலி நடிகராக கவிராஜ் பேரின்பராஜாவும் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.




