NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினால் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் டீஆறு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறித்து வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்; இன்று முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு!

Share:

Related Articles