உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முகமாக 99.5 / 99.7 அலைவரிசைகளில் ஒலிக்க ஆரம்பித்த தமிழ் எப் எம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி தனது முதலாவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது.
இலங்கையின் முதலாவதும் முதன்மையானதுமான யூத் வானொலியாக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி அறிமுகமாகிய தமிழ் எப் எம் இளம் வானொலி அறிவிப்பாளர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த அறிவிப்பாளர்களைக் கொண்டு இன்று வரை வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
அனைத்து வயதினரும் இரசிக்கும் வகையிலான நிகழ்ச்சி நிரல்களோடும் எந்த தலைமுறைக்கும் பொருந்தும் வகையிலான பாடல்களோடும் அறிமுகமாகிய தமிழ் எப் எம் குறுகிய காலத்திலேயே இலங்கையின் முன்னிலை வானொலிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
வானலையில் மட்டுமின்றி அனைத்து சமூக வலைத்தளங்களில் வலுவான தடம் பதித்துள்ள தமிழ் எப் எம், தனது வெற்றிப்பயணத்தை பல சாதனைகளோடும் தொடர்ந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.










