NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீதிமன்றக் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்த நபர் வைத்தியசாலையில் அனுமதி… !

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றின் மாடிக்கட்டடத்தில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபரை கண்டி நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கு பொலிஸார் அழைத்துச் சென்ற போது, ​​சந்தேக நபர் நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2150 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் நேற்று மாலை நீதிமன்றத்துகு அழைத்துச் செல்லப்பட்ட போது பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி, இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles