2020 ஆம் ஆண்டு அறிமுகமாகிய லங்கா பீரிமியர் லீக் போட்டி கடந்த ஆண்டு (2022) மூன்றாம் முறையாகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டிகளில் லைகா நிறுவனத்தின் ஜப்னா கிங்ஸ் அணியும் மூன்றாவது முறையாகவும் பங்கேற்றது.
தமிழ் எப் எம் உடைய ஊடக அனுசரணையில் களமிறங்கிய இந்த அணி கடந்த 2022 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகவும் வெற்றி மகுடத்தை சூடிக்கொண்டது.
திசர பெரேராவின் தொடர்ச்சியான தலைமையின் கீழ் போட்டியிட்ட குறித்த அணிக்கு திலின கண்டம்பி பயிற்சியளித்து வருகிறார். 2020 ஆம் ஆண்டு ஜப்னா ஸ்டேலியன்ஸ் என்ற பெயரில் களமிறங்கிய இதே அணி 2021 ஆம் ஆண்டில் லைகா நிறுவனத்திற்கு உரிமையானதை அடுத்து ஜப்னா கிங்ஸ் என்ற பட்டத்தை வென்றது.
மேலும் மூன்று உள்நாட்டு தமிழ் வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டமை இந்த அணிக்கு மேலும் வலுவை சேர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.