NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் திட்டம் – அமெரிக்காவின் தகவல்கள் குறித்தும் விசாரணை!

அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டதாக அமெரிக்க நீதிதிணைக்களம் தெரிவித்துள்ளமை குறித்து விசாரணைகள் இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளார் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, அறுகம்குடா தாக்குதல் திட்டம் குறித்து தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது அமெரிக்கா தெரிவித்துள்ள தகவல் குறித்தும் ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காக இலங்கையில் சிறைத்தண்டனை அனுபவித்தவர் எனவும் ஏனைய தரப்பினரும் விசாரணைகளை மேற்கொள்ளும் போது அவர்கள் வெளிநாட்டு தூதரகங்களுடன் நிச்சயம் தொடர்புகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயன்றார் என தெரிவிக்கப்படும் பர்ஹாட் சகேரி என்ற நபர் இலங்கையில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் திட்டம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளதாக அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles