(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசிய கீதத்தின் பொருள் மாறும் வகையில், புதிய பாணியில், இசைக்கப்பட்டமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
1978 ஆண்டு அரசியலமைப்பின் படி, தேசிய கீதத்தின் வரிகள் மற்றும் அதன் பின்னணி இசையினை மாற்றி இசைக்கப்பட்டமையானது, நாட்டின் கீர்த்தியையும், அரசியலமைப்பையும் மீறும் செயற்பாடாகும் என சட்ட அறிஞர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நான்காவது லங்கா ப்றீமியர் லீக் தொடரின் ஆரம்ப விழா கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில், நேற்று (30) ஆரம்பமானது.
அதில் தேசிய கீதத்தை இசைப்பதற்காக வாய்ப்பு பாடகி உமார சிங்ஹசங்வுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதன்போது, அவர் பிழையான உச்சரிப்பில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் இசைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.