(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 2023ஆம் ஆண்டுக்கான நான்காவது பருவகாலத் தொடர் வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று (31) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது.
ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இரு போட்டிகள் இடம்பெறவுள்ளன. அதற்கமைய 3 மணிக்கு தம்புள்ள ஓரா அணியும் காலி டைட்டன்ஸ் அணியும் இரவு 7.30க்கு இடம்பெறவுள்ள போட்டியில் பி லவ் கண்டி மற்றும் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிகளும் மோதவுள்ளன.
அதற்கமைய தற்சமயம் ஆரம்பமாகியுள்ள போட்டியில் காலி டைட்டன்ஸ் அணி முதலில் துடுப்பாடி வரும் நிலையில் ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ஓட்டங்களை பெற்றுள்ளது.