(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
RRR திரைப்படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் தனது 58ஆவது வயதில் காலமானார்.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் NTR, ராம் சரண், ஆலியா பட் உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், RRR. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட 5 மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1,000 (இந்திய பெறுமதி) கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.
இந்நிலையில், RRR படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன், இத்தாலியில் காலமானார். இந்தப் படத்தில் வரும் சர் ஸ்காட் என்ற ஆங்கிலேயர் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பதுடன் அவரின் நடிப்பும் வரவேற்பைப் பெற்றது.
அவரது மறைவுக்கு படக்குழுவினர் தமது இரங்கலை வெளியிட்டுள்ளனர்.