கிரிக்கெட் யாப்பை திருத்துவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சரினால் அண்மையில் நியமிக்கப்பட்ட சுயாதீன விசேட குழுவில் இருந்து பர்வேஷ் மஹ்ரூப் விலகியுள்ளார்.
யாப்பு ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் தமக்கு போதிய அனுபவம் இன்மையால் அது தொடர்பில் அமைச்சருக்கு அறிவித்து பதவி விலகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் கிரிக்கெட் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியாக தேவையான சகல ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி கே.டீ.சித்றசிறி தலைமையிலான குறித்த குழுவில் 10 உறுப்பினர்கள் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.