NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டிசம்பர் மாத இறுதியில் IPL 2024 மினி ஏலம் !

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) டிசம்பர் மாத இறுதியில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 மினி ஏலத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறிக்கைகளின்படி, ஒரு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பாக வரும் ஒவ்வொரு உரிமையாளருக்கும் பர்ஸ் தொகை இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பபடவுள்ளது.

ஏலத்தின் இறுதி திகதி  2023 உலகக் கோப்பைக்குப் பிறகு மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், கொச்சி மற்றும் கொல்கத்தா ஆகிய நகங்களில் ஏதாவது ஒரு இடத்தில் நடைபெற உள்ளது. 

குறிப்பிடத்தக்க வகையில், முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், இந்த ஏலமானது அணிகளின் வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாது எனவும் முந்தைய சீசனில் நிர்ணயிக்கப்பட்ட (இந்திய மதிப்பில்) ₹95 கோடியில் இருந்து ஏல பட்ஜெட் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles