NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறந்த கால்பந்து வீரருக்கான FIFA விருது பெற்ற மெஸ்ஸி

2023ஆம் ஆண்டுக்கான FIFA விருதுகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்றது.
இதில் 2023ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான FIFA விருது, ஆர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த மகளிர் வீராங்கனை விருது 2வது ஆண்டாக ஸ்பெயினின் அலெக்ஸியா புடெல்லாசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் கடந்த ஆண்டு நடந்த 22ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி ஆர்ஜென்டினா அணி 3 ஆவது முறையாகவும் உலகக் கோப்பையை சுவீகரித்துக் கொண்டது.
குறித்த போட்டியில் ஆர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles