வாட்ஸ்அப் ஷெட்யூல் க்ரூப் கால்ஸ் (Schedule Group calls) என்ற புதிய அம்சத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது எதிர்கால புதுப்பிப்பில் Android மற்றும் IOS பயனர்களுக்கு கொண்டு வரப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Wabetainfoஇன் அறிக்கையின்படி, இந்த அம்சம் தற்போது உருவாக்க நிலையில் உள்ளது. இந்த அம்சம் பயனர்கள் குழுவின் ஏனைய உறுப்பினர்களுடன் அழைப்புகளைத் திட்டமிடுவதை எளிதாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர, அழைப்பை எப்போது திட்டமிடுவது (காலை ஷெட்யூல் செய்வது) மற்றும் அதற்கு என்ன பெயர் கொடுப்பது என்பது பயனரின் கைகளில் இருக்கும். இது மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போலவே செயல்படும் எனவும் இதில் இணைந்துகொள்பவர்களுக்கு இணைப்பையும் வழங்க முடியும் என்பதோடு ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் இரண்டிற்கும் திட்டமிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.