NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Phone’ஐ Re-start செய்தால் ஆயுள் அதிகரிக்கும் !

Laptop, கம்ப்யூட்டர் அல்லது வேறு ஏதேனும் சாதனத்தை இயக்கினால் அவற்றைப் பல முறை ரீ ஸ்டார்ட் செய்வதன் மூலம் பல பிரச்சகைைளை சரி செய்ய முடியும்.

அதேபோல் போனை(Phone) ரீ-ஸ்டார்ட் செய்வது மெமரியை க்ளியர் செய்ய உதவும் என தொழிநுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்பு இதனுடன் மெமரி மேனேஜ்மென்ட்,நெட்வொர்க் மற்றும் பேட்டரி ஆப்டிமைசேஷன் ஆகியவை சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ஒரு வாரத்தில் போனை எத்தனை முறை ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். இதற்கு நிபுணர்கள் ஒரு வாரத்தில் போனை மூன்று முறையாவது ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

குறிப்பாக ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போனைகளை ஒரு வாரத்திற்கு மூன்று முறையாவது ரீ ஸ்டார்ட் செய்வது நல்லது எனத் தெரிவிக்கின்றனர்.

இன்னும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், போன்களை அவ்வப்போது ரீ ஸ்டார்ட் செய்வதன் மூலம் நீண்ட வருடங்கள் சரியாக பயன்படுத்த முடியும் என்பதோடு போன் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் என்று எதுவாக இருந்தாலும் அவற்றைச் சரியாக அப்டேட் செய்ய வேண்டும்.

குறிப்பாக ஒவ்வொரு அப்டேட்டும் ஸ்மார்ட்போனுக்கு அவசியமாகிறது. அதேபோல் போனில் பயன்படுத்தப்படாத ஆப்ஸ்களை நீக்கிவிட வேண்டும். இத்தகைய ஆப்ஸ்கள் நிறைய சேமிப்பிடத்தை எடுத்துக்கொள்கின்றன. பின்பு வைரஸ் தடுப்பு செயலிகளைத் தவிர்க்க வேண்டும்.

குறித்த செயற்பாடுகள் மூலம் தொலைபேசியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Share:

Related Articles