NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய பரிணாமத்தில் Mozilla Firefox

பலர் பரவலாக பயன்படுத்தப்படும் பிரவுசர் ஃபயர்பாக்ஸ் (Firefox) ஆகும். Mozilla Firefox பிரவுசரில் தற்போது மூன்று விதமான எக்ஸ்டென்சன்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

  1. ஏதாவது ஒரு இணையதளத்தில் பதிவு செய்யும் போது பயனர் மின்னஞ்சல் முகவரியை மறைத்தல்.
  2. URL ஐ பகிரும் போது அதிலுள்ள டிராக்கிங் குறியீடுகளை அகற்றுதல்.
  3. கட்டுரையை ஒலிக்கச் செய்தல் ஆகும்.
    ‘Firefox Relay’ஐ பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை மறைக்க முடியும். இது அவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க உதவும் சிறந்த பாதுகாப்பு அம்சம்.
    குறிப்பாக உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சேகரித்து மார்கெட்டிங் நோக்கத்திற்காக யாரும் பயன்படுத்த முடியாது. பாதுகாப்பான முறையில் மின்னஞ்சல்களை உள்ளிட முடியும்.
    ReadAloud என்பது கட்டுரைகளை வாசித்து காட்டும் அம்சமாகும். பயனர்கள் எந்தவொரு கட்டுரையையும் பார்த்து படிப்பதற்குப் பதிலாக, அவற்றை ஒலிக்கச் செய்து கேட்கலாம்.
    இது அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இது செய்தி தளங்கள், வலைப்பதிவுகள், இரசிகர் புனைகதை, பாடப்புத்தகங்கள், பள்ளி மற்றும் வகுப்பு இணையதளங்கள், ஆன்லைன் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடப் பொருட்கள் உட்பட பல்வேறு இணையதளங்களில் வேலை செய்யும் என்று ஃபயர்பாக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இறுதியாக ClearUTL என்ற எக்ஸ்டென்சன் உருவாக்கப்பட்டுள்ளது, இது பயனர்கள் பாதுகாப்பற்ற URL லிங்குகளில் இருந்து டிராக்கிங் குறியீடுகளை அகற்ற உதவுகிறது.
    இத்தகைய கண்காணிப்பு கூறுகளை ClearUTL எக்ஸ்டென்சன்கள் அகற்றிவிடும். எனவே உங்களிடம் எளிமையான மற்றும் தெளிவான URL பயனர்கள் இந்த எக்ஸ்டென்சன்களை ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் நேரடியாக இயக்கி பயன்படுத்தலாம்.
    ஃபயர்பாக்ஸ் பிரவுசரை அப்டேட் செய்வதன் மூலம் புதிய அம்சங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Share:

Related Articles