NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள Lock-Chat அம்சம்!

உங்கள் தனிப்பட்ட சாட்களையோ, தொழில் ரீதியான உரையாடல்களையோ மற்றவர்கள் பார்க்காமல் இருக்க இனி வாட்ஸ்அப் மொத்தத்தையும் Lock போட்டு (WhatsApp lock) வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்படும் நபரின் Chat ஐ மட்டும் Lock செய்து வைத்துக்கொள்ள முடியும்.

வாட்ஸ் அப் நிறுவனம் Lock Chat என்ற புதிய வசதியை தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களைக் கவரும் விதமாக அவ்வப்போது புதிய புதிய வசதிகளை அறிமுகம் செய்துவருகிறது.

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளதால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பயனாளர்களின் சௌகரியம் கருதி அவ்வப்போது மேம்பட்ட வசதிகளை வாட்ஸ் அப் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லாக் சாட் என்ற புதிய வசதியை விரைவில் கொண்டு வரவுள்ளது. இந்த வசதி மூலம், பயனர்கள் ஒருவருடனான தமது உரையாடலை பிரத்யேகமாக லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும்.

நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கியமான தகவல் தொழில்நுட்ப செயலி என்றால் அது WhatsApp தான். குடும்பத்தார், நண்பர்களுடன் உரையாடுவது தாண்டி தொழில் ரீதியான உரையாடல்களும் இப்போது வாட்ஸ்அப்பில் நிகழ ஆரம்பித்து விட்டது. உங்கள் தனிப்பட்ட சாட்களையோ, தொழில் ரீதியான உரையாடல்களையோ மற்றவர்கள் பார்க்காமல் இருக்க இனி வாட்ஸ்அப் மொத்தத்தையும் Lock போட்டு (WhatsApp lock) வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்படும் நபரின் Chat ஐ மட்டும் Lock செய்து வைத்துக்கொள்ள முடியும்.

விரல் ரேகை அல்லது Passcode மூலமாக இதனை Lock செய்து வைத்துக்கொள்ளலாம். பயனர்களின் அனுமதி இல்லாமல் வெளி நபர்கள் யாரேனும் வாட்ஸ் அப்பைத் திறந்து பார்த்தாலும் குறிப்பிட்ட Lock செய்து வைக்கப்பட்டுள்ள இந்த உரையாடலை அவர்களால் காண முடியாது. அதேபோல, இந்த லாக் சாட்டின் மூலமாக பகிர்ந்துகொள்ளப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செல்போனில் உள்ள கேலரியில் ஆட்டோமேட்டிக்காக Save ஆகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Android பீட்டா வெர்சனில் சோதனை முறையில் செயல்பாட்டில் உள்ள இந்த சேவை, அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் விதமாக விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles