(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
Whatsapp செயலியில் Video call பேசும் போது, உங்களது அலைபேசியின் ஸ்கிரீனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தினை மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி பயனர்கள் Video call பேசும் போது ஷேர் ஐகோனை க்ளிக் செய்து குறிப்பிட்ட செயலியோ அல்லது சாதனத்தின் முழு ஸ்கிரீனையோ ஷேர் செய்து கொள்ளலாம்.
ஷேர் செய்ய தொடங்கியதும், உங்களது ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கும் தகவல்கள் அனைத்தும் பகிரப்பட்டு, ஷேர் செய்வோருடன் பகிரப்படும். இதனை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.