NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரசாங்கம் வழங்கிய அரிசியை உண்ட 7 கோழிகள் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!

குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கம் வழங்கிய அரிசி சிலவற்றை சாப்பிட்ட 7 கோழிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வு அறிக்கையை உடனடியாக வழங்குமாறு ரம்படகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகள் முன்வைத்த தகவல்களை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ரிதிகம பனகமுவிலுள்ள குறைந்த வருமானம் பெறுபவருக்கு வழங்கப்பட்ட அரிசியில் ஒரு பகுதி கோழிகளுக்கு வழங்கப்பட்டது.

அரிசியை உண்ட கோழிகள் மயங்கி விழுந்து பின்னர் உயிரிழந்ததாக வீட்டு உரிமையாளர் பொது சுகாதார அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles