ஆபாசப் பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ், 2006ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்புடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக அவரின் குற்றவியல் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதைப் பற்றித் தான் நினைக்க விரும்பாததாகவும் அந்த விவகாரம் பொதுப்படையாக ஆகிவிடும் என்று தான் அஞ்சியதாகவும் டேனியல்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2016ஆம் அண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாலியல் உறவு வைத்துக்கொண்டதை மறைக்க டிரம்ப், டேனியல்சுக்குப் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை நடந்துவருகிறது.
இருவருக்கும் இடையிலான பாலியல் உறவு குறித்து டேனியல்ஸ் நீதிமன்றத்தில் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அந்த விவகாரம் 2018ஆம் ஆண்டில் பொதுப்படையான பிறகு தனது வாழ்க்கையில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
வீட்டில் தான் ஒதுக்கப்பட்டதாகவும் தனக்குத் தொந்தரவு இழைக்கப்பட்டதாகவும் டேனியல்ஸ் நீதிபதிக் குழுவின் முன்னிலையில் சொன்னார்.
டேனியல்சின் வாக்குமூலத்தை டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் எதிர்த்துப் பேசினர். அண்மை ஆண்டுகளில் டிரம்ப்புடனான உறவு குறித்து டேனியல்ஸ் முன்பின் முரணானத் தகவல்களை வெளியிட்டதாகக் கூறி அவர்கள் வாதிட்டனர்.
பாலியல் உறவை மறைக்க டேனியல்சுக்கு 130,000 டொலர் (176,270 வெள்ளி) வழங்கியதுடன் அதை மறைக்கப் போலியான வர்த்தகக் கணக்குகளைக் காண்பித்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
என்றாலும், குற்றச்சாட்டுகளையும் டேனியல்சுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதையும் டிரம்ப் மறுத்துள்ளார்.