ஆப்பிரிக்க நாட்டின் எபோலா (நுடீழுடுயு) ஆற்றங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 1976 ஆம் ஆண்டு எபோலா (நுடீழுடுயு) வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
எபோலா (நுடீழுடுயு) தொற்றால் 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சுமார் 11 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், குறித்த வைரஸ் தொற்று கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இந்த தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் இதுவரை 40க்கும் மேற்பட்டோருக்கு எபோலா (நுடீழுடுயு) வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக குறிப்;பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைநகர் கம்பாலாவில் (முயஅpயடய) தாதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், இந்த ஆண்டு எபோலா தொற்றால் உயிரிழந்த முதல் நபர் இவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அங்கு சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.