இந்திய லோக் சபா தேர்தல் (பாராளுமன்றம்) இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்கு தலா ஒரு பிரதிநிதியை அனுப்புவதற்காக 543 மக்களவைத் தொகுதிகளில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
எந்த கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. 1951-52ல் நடந்த இந்தியாவின் முதல் தேர்தலுக்குப் பிறகு இந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் இரண்டாவது மிக நீளமானது.
வாக்குகள் எண்ணப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் வெற்றி தோல்வி நிலைமைகள் மெதுவாக வெளிப்படும் என்பதுடன் பிற்பகலில் முடிவுகள் முழுமையாக வெளிவரும் என இந்திய ஊடகங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
தபால் மூல வாக்கு எண்ணிக்கை முடிந்த 30 நிமிடங்களுக்குப் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.