கனடாவை சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப்சிங் நிசார் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது தொடர்பில் இவன் மீது பல வழக்குகள் காணப்பட்டுள்ளநிலையில் கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவன் மீது பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் நடந்த இந்து மத தலைவர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இருந்ததால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவனை தேடி வந்தனர்.
சமீபத்தில் இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது. அவன் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவனை பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்தனர்.
அவனை பயங்கரமாக தேடி வந்த நிலையில் கனடாவில் கொல்லப்பட்டு உள்ளான். அவனை சுட்டுக்கொன்றது யார் என்பது குறித்து இது வரையில் அறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.