பூமியைப் போல மனிதர்கள் வாழ்வதற்கான இடம் வேறு எங்கும் இருக்கின்றதா என்பது குறித்து நாசா தொடர்ந்தும் தனது ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புக்களையும் நடத்தி வருகின்ற நிலையில், தற்போது சூரியக் குடும்பத்தில் பெரிய கோளான வியாழனின் துணைக்கோள்களில் ஒன்றான யூரோபாவில் வரும் ஒக்டோபர் மாதம் கிளிப்பர் என்ற விண்கலமொன்றை நாசா செலுத்தவுள்ளது.
இந்த திட்டமானது, இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்ற கேள்விக்கு பதிலைக் கொடுக்கும் வகையில் அமையும்.
இந்த துணைக்கோளான யூரோபாவில் யாராவது வாழ்வது கண்டறியப்பட்டால், உயிர்கள் வாழும் பட்டியலில் பூமியுடன் யூரோபாவும் இணையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிப்பர் விண்கலம் வைக்கப்பட்டிருக்கும் அறையில் குறிப்பிட்ட சிலரைத் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லையாம். காரணம், பூமியிலிருந்து எந்தவொரு நுண்ணுயிரும் அங்கு எடுத்துச் செல்லப்படக் கூடாது.
எனவே இந்த விண்கலமானது, யூரோபாவில் உயிர்கள் வாழ்கின்றனவா? அல்லது வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா? என்பதை ஆராய்ந்து அனுப்பினால் மாத்திரமே விரைவில் அங்கு வாழ்வதற்கான குடியேற்றங்களை அமைக்க முடியும் என கிளிப்பர் திட்ட மேலாளர் ஜோர்டான் கூறியுள்ளார்.