சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் ஹெமில்டன் மைதானத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.
மழை காரணமாக போட்டி தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதோடு, 37 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக ரச்சின் ரவீந்திரா 79 ஓட்டங்களையும் மார்க் செப்மன் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன ஹெட்ரிக் சாதனை நிகழ்த்தி 4 விக்கட்டுக்களை கைப்பற்றியதோடு, வனிந்து ஹசரங்க 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
போட்டியில் வெற்றிபெற வேண்டுமெனில் இலங்கை அணி, 37 ஓவர்களில் 256 ஓட்டங்களைப் பெறவேண்டும்.