T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை கிரிக்கட் அணி பங்கேற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு பல அநீதிகள் நடந்துள்ளன. இது தொடர்பில் கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தேன்.
கிரிக்கெட் வீரர்கள் கூட தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முறைப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்குள் எமது நாட்டு கிரிக்கெட் அணிக்கு உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
T20 உலக கிண்ணப் போட்டிகள் நடைபெற்ற நாசோ மைதானம் கிரிக்கெட் போட்டிகளுக்கு பொருத்தமற்ற மைதானம் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இது குறித்து வாதங்களில் ஈடுபடாமல் கிரிக்கெட் அணிக்காக முன்நிற்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை கடைப்பிடிக்கும் தவறான உபசரிப்பு, பலம் வாய்ந்த நாடுகளுக்கு உயர்வான உபசரிப்பும் பலம் குன்றிய நாடுகளை மிதித்துத் தள்ளும் நடத்தைக்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறான அநீதிகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.