NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை மகளிர் அணிக்கும் நியுசிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி..!

2024 உலக கிண்ண மகளிர் T20 கிரிக்கட் தொடரில் இலங்கை மகளிர் அணிக்கும் நியுசிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான போட்டி தற்போது இடம்பெற்றது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது

இதனையடுத்து, 116 என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியுசிலாந்து மகளிர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்ட்ங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

Share:

Related Articles