NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் தொடரும் இணையவழி நிதி மோசடி – மேலும் 120 சீன பிரஜைகள் அதிரடியாக கைது..!

நாட்டில் பாரியளவிலான இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, குண்டசாலை பிரதேசத்திலுள்ள சொகுசு விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பிரஜைகளிடம் இருந்து 15 கணனிகளும் 300ற்கு மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இணையவழி நிதி மோசடி அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வாரத்தில் மாத்திரம் நிதி மோடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 200 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆறாம் திகதி ஹன்வெல்ல பிரதேசத்தின் இரு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து பிரஜைகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்

மேலும், கடந்த 7 ஆம் திகதி நாவல பிரதேசத்தில் 19 சீன பிரஜைகளும், கடந்த 10 ஆம் திகதி பாணந்துறையில் 20 சீன பிரஜைகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles