இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த 9 மாதங்களில் 67 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்சம் ஊழல் தொடர்பாக மொத்தம் 3,045 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், 81 சோதனை நடவடிக்கைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்டது.
இலஞ்சம் தொடர்பாக 259 முறைப்பாடுகளும், ஊழல் தொடர்பாக 466 முறைப்பாடுகளும், முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பாக 86 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.
810 முறைப்பாடுகள் தொடர்பில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும் அல்லது இலஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வராத காரணத்தினாலும் தள்ளுபடி செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.