ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் மீண்டு வருவதற்கான “அடையாளம் எதுவும் இல்லை” என்று அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஈரானிய அதிகாரியை மேற்கோள் காட்டி, குறித்த விபத்தில் ஹெலிகாப்டர் “முற்றிலும் எரிந்துவிட்டது” என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரின் முழு பகுதியும் கணிசமாக சேதமடைந்து எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, விபத்து நடந்த இடத்தில் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில்இ தற்போது முழு சர்வதேச நாடுகளின் பார்வையும் ஈரான் பக்கம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.